மற்றவர்க்கு ஒரு முறை பிடித்தால் எனக்கு நூறு முறை !
மற்றவர் ஒரு முறை ரசித்தால் நான் நூறு முறை !
எனக்கு என்னவோ எல்லாம் பிடிக்கிறது.
எனக்கு பிடித்ததும் பிடிக்கிறது
பிறருக்கு பிடித்ததும் பிடிக்கிறது
பிறருக்கு பிடிக்காததும் பிடிக்கிறது
எனக்கே பிடிக்காததும்,
எனக்கு பிடிக்கிறது !
எல்லாவற்றிலும் மிளிரும் ஆழ்ந்த அழகு என் கண்ணில் மட்டும் எப்படியோ பட்டு விடுகிறது. பார்ப்பதெல்லாம் அழகு. அழகு அழகு அழகு !!!
வெளியே தெரியும் அழகைதாண்டி உள்ளே மிளிரும் ஆற்றல் அல்லவா அழகாய் தெரிகிறது !!!ஆற்றல் தாண்டி அதனுள் இருக்கும் தெய்வதம் அல்லவா மனதுள் தெரிகிறது
தனக்குள் உறிஞ்சப்பார்க்கும் இயற்கையின் கைகள் என்னை தழுவுகிறது !
தழுவும் கைகள் அணைக்க சூட்சும கைகள் நீளுகிறது
மண்ணில் கரைந்து போக மனம் வேண்டி நிற்கிறது !!
--
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எல்லாஞ்செரியா படிச்சுட்டு வந்தேன்
பதிலளிநீக்கு//எனக்கே பிடிக்காததும்,
எனக்கு பிடிக்கிறது !//
இது படிச்சதும் சிரிப்பு தானா வந்துடுச்சு,,,
:))))