ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

காற்றோடு !!!

அன்றொரு நாள் ஆசைகள்

நாங்கள் போகிறோம் என்று சொல்லிப்போயினமற்றொரு நாளில் அறிவும்

எனக்கு வேலையில்லை என்று கிளம்பிப்போனதுபிறிதொரு நாளில் ஆன்மா

அலுத்துப்போய் காணாமல் போயிற்றுஎப்போதும் தேடுவதில்லை !

எப்போதும் தேடுவதில்லை !மழை சொரிந்து மலர்ந்த மேகமாய்

வானக சஞ்சாரம்; காற்றோடு !!!
வியாழன், 25 பிப்ரவரி, 2010

தொலைந்து போக வசதியாய்

எத்தனை கேள்விகள்

உருவமா

அருவமா

இங்கா

அங்கா

கொடுப்பாயா

எடுப்பாயா

படைப்பாயா

அழிப்பாயாஎத்தனை அனுமானங்கள்

கெட்டவன்

நல்லவன்

இருப்பவன்

இல்லாதவன்

எதுவும் இல்லாதது

அர்த்தம் நிரம்பியது

அன்பே கடவுள்

கடவுள் அன்பு

ஒன்றிலிருந்து ஒன்று

எல்லாம் ஒன்று

திங்கள், 22 பிப்ரவரி, 2010

யாருக்கும் உலகம் தெரியவில்லை

விசாரணைகள்

கடவுள் குறித்து

காமம் குறித்து

காதல் குறித்து

வாழ்தல் குறித்து

சாதல் குறித்து

அறிதல் குறித்து

புரிதல் குறித்து .........

யாருக்கும் உலகம் தெரியவில்லை !--

புதன், 3 பிப்ரவரி, 2010

ஜாதி

எவ்வளவு அழகான பெயர் !!!

மனித நேயம் குன்றிப்போன மனிதர்களால் அசிங்கமாக்கப்பட்ட அழகான பெயர் !ஜாதியில் என்ன தவறு ? முல்லை ஒரு ஜாதி, மல்லி ஒரு ஜாதி, ஜாதி மல்லியும் ஒரு ஜாதி.

நேசம் இல்லா மனங்களின் வாசனை குன்றிய நேரங்களில் ஜாதி அசிங்கமாக்கப்பட்டுவிட்டது !

ஒரு செல் உலகிலிருந்து பகுத்தறிவு மனிதம் வரையில், ஜாதிகள் தேவையாய் இருக்கின்றன.

அவையே உலகை "உலகாய்" நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

அவற்றின் வேறுபடும் தன்மையே உலகை நடத்திச்செல்கிறது.

வேறுபடும் தன்மையே ஜாதி என்றாகிறது.

வேறுபடுவதில் என்ன தவறு ?

வேறுபட்டு நிற்பதே தனித்து நிற்பதாகிறது.

தனித்து நிற்பதே சாதனையாகிறது.

சாதனையில் என்ன தவறு ?

கவிதைகள்: அன்றும் இன்றும்

உணர்வுகள் பூக்கின்ற காலத்தில் கவிதைகள்

முடிவுகள் காய்க்கின்ற கோலத்தில் கவிதைகள்எண்ணங்கள் குமிழ்த்ததில் கவிதைகள்

அவையெல்லாம் வடிந்ததில் கவிதைகள்புரியாத நேரத்தின் கவிதைகள்

புரிந்ததன் சாரத்தின் கவிதைகள்பரவச பாவத்தின் கவிதைகள்

சமரச ராகத்தின் கவிதைகள்நினைத்ததை வார்த்தையாக்க கவிதைகள்

நினைத்ததை துடைத்துப்போட கவிதைகள்------சாந்தினி