திங்கள், 25 ஜனவரி, 2010

வாழ்க்கை பேரங்கள்

மகள் : அப்பா நான் மேலே படிக்க வேண்டும் !


தந்தை : சொத்து கிடையாது! சம்மதமா ?



மகன் : பிசினெஸ் செய்ய பணம் வேண்டும்

தாய், தந்தையிடம் : காலம் பூரா காப்பாத்தப்போறவன், கேட்டதை கொடுங்க!



கணவன் : மல்லிகை, அல்வா ...ராத்திரிக்கு ....

மனைவி : ம்ம்ம்ம் ...



மனைவி : வாய்க்கு ருசியாய் சமையல், கைக்கு ......

கணவன் : சரி சரி... நாளைக்கு கடைக்கு போகலாம்.



கணவன் : கஷ்டப்பட்டு வேலை ....

மனைவி : நாள்பூரா வேலை ......



கணவன் : நண்பர் குழந்தைக்கு என்ன பரிசு வாங்கலாம்?

மனைவி : நம் மகனுக்கு இது வாங்கி வந்தார்கள்.



கடவுளிடம் : மொட்டை அடிக்கிறேன், எனக்கு இது வேண்டும்.

கோயில் சுற்றுகிறேன், எனக்கு அது வேண்டும்.



குழந்தையிடம் : ஒழுங்காயிரு, மிட்டாய் தருகிறேன் !

சொல்பேச்சு கேள் , சொத்து தருகிறேன் !





ஒழுக்கம் உயர்வு தரும்.

கடின உழைப்பு காசு தரும்.

மனித நேயம் புகழ் தரும்.

தருமம் தலை காக்கும்.

வினைகள், விளைவுகள்

வாழ்க்கையின் பேரங்கள் !

1 கருத்து:

  1. பயம் காட்டுறதை சொல்லியிருக்கீங்களா?

    சின்னதுல இருந்தே அப்பிடி பழக்கிட்டாங்க பழகிட்டாங்கன்னும் சொல்லலாம் பூச்சாண்டி பூச்சாண்டின்னு சொல்லி சொல்லியே வளர்றாங்க வளக்குறாங்க... இது மாறவே மாறாது...

    பதிலளிநீக்கு