வெள்ளி, 8 ஜனவரி, 2010

வயதான மரம் !
வளர்ந்து கொண்டுஇருந்த
ஏதோ ஒரு நாளில், ஒரு நேரத்தில்,
வயதானவர்களை பிடித்துப்போனது !
விவேகம் பிதுங்கும்
தோலின் சுருக்கங்கள்
எப்படியோ கண்ணில் பட்டுவிட்டது !
அன்பு சுடரும்
குழிந்த கண்கள்
தன்னை அடையாளம் காட்டிவிட்டது !
பழுத்த அனுபவம்
"பொல்" லென்ற நரையில்
பளிச்சிட்டு சிரித்தது !
வயதானவர்களை மட்டுமின்றி
வயதாவதும் பிடித்துப்போனது !
முதுமைதான் எத்தனை அழகு !
அழகான இந்த தருணத்தில்,
அருகிருந்தும்
ஆழ்ந்து அறியாமல், மறைந்திட்ட
என் தாத்தா, பாட்டிக்கு
என் அன்பு அஞ்சலி !

1 கருத்து:

  1. //வயதானவர்களை மட்டுமின்றி
    வயதாவதும் பிடித்துப்போனது !//

    அய்யய்யோ பொண்ணுக நீங்களே இப்படி இருக்கலாமோ மேக்கப் உபகரண விலையெல்லாம் குறைஞ்சுடுமே...

    பதிலளிநீக்கு