வெள்ளி, 8 ஜனவரி, 2010

எண்ணத்துகள்கள் !

எண்ணத்துகள்கள் !
பொழுது போகாத இலக்கியவாதிகளோடு சேர்ந்துகொண்டு,
எல்லா இடத்திலும் திரிகின்றன!
கண்டே தீர கங்கணம் கட்டி அலைகிற விஞ்ஞானிகளோடு
அவை அலைகின்றன!
கடவுளை கண்டதாய் கர்வம் கொண்டலையும் ஞானிகளோடும் கொஞ்சம்  குலவுகின்றன!
வாழ்க்கைப்போரில் தினம் மாயும் மனிதனோடும்
மாயம் செய்கின்றன!
பசிக்கு அலையும் விலங்குகளோடு
வன்முறை காட்டி வனம் சேர்கின்றன
பேசத்தெரியா செடிகொடிகளில்
தொட்டுத்தொட்டே உயிர் வளர்க்கின்றன.

கடவுள் ஏமாந்து போன ஒரு தருணத்தில்,
எல்லோரும், எல்லாமும்
ஒருதுளி உயிரும் மிச்சம் வைக்காமல்
செத்துபோய்விட.........ஹஹஹா....


1 கருத்து:

  1. //ஹஹஹா....//

    இது சாதாரண சிரிப்பா ? பெரிய ஞானியோட சிரிப்பு நம்பியார் சிரிப்பு அதான் கடவுளோட எல்லாம் சேராதீங்கன்னா கேட்குறீங்களா?

    பதிலளிநீக்கு