இத்தனைநாள் தொலைத்துவிட்டு இன்றென்னை கண்டுகொண்டான் !
என் பெற்றோர் இவனுக்கு நானென்று எழுதவில்லை
பேசி காதல் வர தோழிகளும் முயலவில்லை
தன்னைப்பற்றி தான் சொல்லி இவன் காதல் வலை வீசவில்லை
கண் உகுத்து நின்ற போதும் நேசக்கரம் கொடுக்கவில்லை
கேள்விகள் வந்தபோது பதில் தேடி தரவில்லை
குலைந்துபோனபோது கட்டி அணைக்கவில்லை !!
ஆயினும்....
இத்தனைநாள் தொலைத்துவிட்டு இன்றென்னை கண்டுகொண்டான் !
வாலிப மயக்கத்தில் இவனிருப்பிடம் அறியவில்லை
கருத்து கலக்கத்தில் இவனிருப்பதும் தெரியவில்லை
காதலும் நட்புமாய் அறிமுகம் தேடவில்லை
அறிவிளக்கு ஏந்திக்கொண்டு தேடித்திரியவில்லை
காமம் பொங்கிவர காமன் வசம் நானும் இல்லை
எல்லாம் கிட்டிவிட்ட எக்களிப்பும் எனக்கு இல்லை
ஆயினும்....
இத்தனைநாள் தொலைத்துவிட்டு இன்றென்னை கண்டுகொண்டான் !
( கண்கண்டதெய்வமாய் கணவன் அமையாதபோது தெய்வமே கணவனாகிறான் )
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சத்தியமாய் எனக்கு புரியலிங்கோ..
பதிலளிநீக்குபுரியிற வயசும் இல்லத்தான்
என்றாலும் கவிதைகள்
புரியிற வயசுதான் இது,
இருந்தும் புரியவில்லை...
இத்தனை நாள் இருந்துவிட்டு இன்றிதை கண்டுகொண்டேன்! கவிதையின் உள்ளர்த்தங்கள் எழுத்தாளனையும் தழுவியவனை தவிர யாருக்கும் புரியாதெண்டு.
;)
மிகவும் சரி !!!
பதிலளிநீக்குஎண்ணத்துக்கும் மொழிக்கும்
நடக்கிற போராட்டத்தில்
எண்ணங்கள் ஜெயிக்கிற தருணங்கள்
இவையோ !!!!!
புரியாத கவிதைகள் ....
வருகைக்கு நன்றி !!