வியாழன், 11 மார்ச், 2010

எதுவும் முக்கியமில்லை...

எல்லோரும் போலத்தான் நானும் உண்ணுகிறேன்
நேரம் வந்தால் போகிறேன் புத்தகத்தோடு...
சோபா -வில் கால்நீட்டி "டீ" குடிக்கிறேன்
டிவி -யில் எது வந்தாலும் வெறித்து பார்க்கிறேன்.
தேடித்தேடி திரைப்படங்கள் ...
ஓடி ஓடி உணவகங்கள் ...
மட்டமான ஜோக்குக்கு கூட சிரித்து வைக்கிறேன்.
திட்டு வாங்கினால் கொஞ்சம் அழுது வைக்கிறேன்.
உடல்வலி தலைவலி கால்வலி பல்வலி ...
வேலை, மாத்திரை, டாக்டர் செலவு ...
வாரத்தின் முடிவில் கொஞ்சம் சமைத்து பார்க்கிறேன்
பழகின சுகத்தில் கொஞ்சம் தூங்கி பார்க்கிறேன்.
நிலம், வீடு, கல்யாணம், கருமாதி
வாழ்ந்து பார்த்தல், செத்துப்போதல்...
மாயா வான உலகிலே எதுவும் நிலைப்பதில்லை
மரித்தபின் பின் விரல்கள் எழுத மடங்குவதில்லை
முக்கியமான விஷயமாக என் தோழிக்கு எதை எழுதிப்போடுவது?....
சாந்தினி

2 கருத்துகள்: