திங்கள், 1 மார்ச், 2010

பொய்யிடம் பொய்யின்றி எதுவுமில்லை.



















இப்படியும் அப்படியுமாய்


திருப்பிப்போட்ட வாழ்வின்

ஆயிரம் ஓட்டைகள்.



அருவெருப்பாயும், பயமாயும் இருக்கிறது.

நான் விழுங்கும் வாழ்வு என்னை விழுங்கிடும் அபாயம்.

துக்கப்பந்து உருண்டு அடைக்கிறது.

விழித்துக்கொண்டே இருந்து களைத்து விட்டது.

உறக்கம், விழிப்பு இரண்டும் பயனில்லை.



சற்று நேரம் என்று எப்போதும் உறங்கிடும் ஆயாசம்

உலகம் என்னை கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறது

என் பதில்கள் என்னை நிறுத்தச்சொல்கின்றன.

அவை பாதி பொய் என்கின்றன.

சிறிது நேரம் சென்று மீதியும் பொய் என்கின்றன.



உறங்கிடும் ஆயாசம் மீண்டும் மூடிக்கொள்கிறது

கண்ணும், காதும், மொழியும் மூடிப்போகட்டும்.

உடல் மண்ணில் மட்கும் வரை.

என்னிடம் எதுவுமில்லை

இருந்தன எல்லாம் விழுந்து விட்டன.



பொய்யிடம் பொய்யின்றி எதுவுமில்லை.

நான் உறங்கப் போகிறேன்......நீளமாக

1 கருத்து: