வெள்ளி, 22 ஜனவரி, 2010

ஆனந்தம்

துகளே ! துகளே ! துகளே !

கட துகளே ! துகளே ! துகளே !



அருவாய் வருவாய் துகளே !

கருவில் தெரிவாய் துகளே !

பருவில் அறிவார் துகளே !

சுறுவில் மறைவார் துகளே !



துகளே ! துகளே ! துகளே !

கட துகளே ! துகளே ! துகளே !





கண்ணில் சிரிக்கும் துகளே !

என்றும் இருக்கும் துகளே !

வண்ணம் காட்டும் துகளே !

எண்ணம் சொல்லும் துகளே !



துகளே ! துகளே ! துகளே !

கட துகளே ! துகளே ! துகளே !



உன்னை அறிந்தேன் துகளே !

உயிரை உணர்ந்தேன் துகளே !

அங்கும் எங்கும் துகளே !

ஆனந்தமாவது துகளே !



துகளே ! துகளே ! துகளே !

கட துகளே ! துகளே ! துகளே !



(கட துகள் என்பது " God's particle". கடக்கும் துகள், கடத்தும் துகள், கடவுள் துகள் என விளக்கம் பிரியும்)



சாந்தினி

1 கருத்து:

  1. நல்ல வேளை கடைசியில விளக்கம் கொடுத்தீங்க இல்ல நான் கடலை துகள்ன்னு புரிஞ்சுருப்பேன்...!

    :))))))))

    பதிலளிநீக்கு