திங்கள், 11 ஜனவரி, 2010

எங்கே கடவுள் ?

கலாச்சாரம், கல்லில் கடவுளைக்காண கற்றுக்கொடுத்தது.
பிரார்த்தனை, கல்லான கடவுளை சந்தேகித்தது.
கல்வி, கடவுளின்  இருப்பினை கேள்வி கேட்க கற்றுக்கொடுத்தது.
அறிவு, கடவுளுக்கு அவசிய நிரூபணம் கேட்டது.
வாழ்வின் வலிகள், கடவுள் இல்லையென்று சத்தியம் செய்தது.

வலியின் உச்சத்திலும் வாழ்க்கை தெரிந்த போது,
கடவுள் பற்றி குழப்பம் வந்தது.
மகிழ்வின் துளிகள் பற்றிய போது,
கடவுள் பற்றி தெளிவு வந்தது.
வாழ்வும், மகிழ்வும் புரிந்த போது
கடவுளோடு நட்பு வந்தது !
துளித்துளி வலிகள், சிறகாய் வாழ்வு
காற்றாய் மகிழ்ச்சி ......
புரிதலோடு கடவுள் கலந்தது !
என் புரிதலே என் கடவுள் என்றானது !

1 கருத்து:

  1. //வலியின் உச்சத்திலும் வாழ்க்கை தெரிந்த போது,
    கடவுள் பற்றி குழப்பம் வந்தது.//

    இருக்காரா இல்லையான்னா?

    அதான் கடைசிவரியில் விடை வந்துவிட்டதே....

    பதிலளிநீக்கு