வெள்ளி, 22 ஜனவரி, 2010

ஆங்காரம்

எனக்குள் ஆங்காரம் தினம் தினம் உறுமுகிறது

சொல்லிப்போ! எனக்கு சொல்லிப்போ !

எத்தனை கால கண்ணாமூச்சி ?

ஆடிக்களைத்து விட்டேன் !

கடவுளோ அல்லது கடவுளின் துகளோ

யாராயிருப்பினும் ...

என் இருப்பின் இயல்பினை உரைத்துப்போ !

எத்தனை முறை கேட்பது ?

அன்பும் அறிவும்

போட்டிபோட்டு கைவிரிக்கிறது



படைப்பை செய்து

அதில் குழப்பம் செய்ய

யாருனக்கு கற்றுக்கொடுத்தது ?

ஜெயிக்கச்சொல்லி

தோற்கடிக்க

யாருனக்கு உரிமை கொடுத்தது ?



ஆங்காரம் வைத்து,

அடிக்கவும் செய்கிறாய்..



இப்போது வலிக்கிறது !

துளியாய் துவள்கிறது !



ஒளிந்தாடும் வாலியே

உன்னை ஜெயிக்க மீண்டும் வருவேன் !

அதுவரை தோல்வியில் திளைப்பேன் !

1 கருத்து:

  1. //உன்னை ஜெயிக்க மீண்டும் வருவேன் !

    அதுவரை தோல்வியில் திளைப்பேன் !//

    ஆனாலும் உங்களுக்கு இம்புட்டு ஆங்காரம் ஆவாது சாந்தினி.. அதுவும் கடவுள் கிட்டயே...ம்ம்ம்

    பதிலளிநீக்கு