வியாழன், 12 நவம்பர், 2009

காதலும் காபியும்...
அன்று..
பார்த்தேன்
ரசித்தேன்
உணர்ந்தேன் !
பார்க்க விட்டாய்
பழக விட்டாய்
தொடவும் விட்டாய்
இதழ் தொடவும் விட்டாய் !
ரசிக்க விட்டாய்
ருசிக்க விட்டாய்
மிதக்க விட்டாய்
களியில் மிதக்க விட்டாய் !
இன்று...
பார்க்கவில்லை
பழகவில்லை
தொடவுமில்லை !
ருசிப்புமில்லை
மிதப்புமில்லை
களியுமில்லை !
காதலுக்கு தோல்வி வரலாம்
காபிக்கு அல்சர் வரலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக