வியாழன், 11 மார்ச், 2010

முக்கியமானதை சொல் !

இன்றைய காலை இன்னும் புதியதாய் பூத்திருந்தது.
காலையின் வாசம் இன்னும்கூட நாசிகளில்...
சூரியன் நின்று நிதானமாய் ஹலோ சொல்லி நகர்ந்தது.
காற்றும் பக்கம் வந்து காதோர கதை பேசி போனது.
என் வீட்டு பறவைகள் ரகசியங்களை கத்தி கத்தி கூவின.
பனை மரத்து ஆந்தை பகலிலும் என்னை உற்றுப்பார்க்கிறது.
புல்வெளியின் புற்கள் மழை ஈரத்தை சூரிய டவலில் துடைத்துக்கொண்டு ....
பக்கத்து குளத்தின் விடியலின் கரங்கள் வானை நோக்கி நீண்டு கொண்டு ...
நேற்றைய கனவுகள் இன்றைய பொய்களாகவும் ..
இன்றைய நினைவுகள் நாளைய கனவுகளாகவும்.
எல்லோரும் காலை வணக்கம் சொல்கிறார்கள்
கண்களில் சிரிப்பை தேக்கி ....
இன்றைய வேலை குறைவு என்று ...
எனது கம்ப்யூட்டர் என்னை பார்த்து சிரிக்கிறது ...
இன்று என்னை பார்த்துக்கொண்டே இருக்கப்போகிறாய் என..
கீபோர்ட் -க்கு கூட நிறைய சந்தோஷம்
என் கவிதையை உள் வாங்கிக்கொள்ள ...
நண்பரொருவர் அக்கறையாய் அடுத்தவார நிகழ்ச்சியின் நகலொன்றை கொடுத்துப்போனார்.
என் மகன் நான் தோற்காமல் இருக்க ஏதேதோ செய்து பார்க்கிறான் ..
என் தலைவலிக்கு இதமாய் கணவனின் விரல்கள் .....
டீயும் இலக்கியமும் பிரியாத துணையாக
இன்டர்நெட் -ம் சிரிப்புகளும் வாழ்வின் தொடராக ...
தோழி கேட்கிறாள் முக்கியமானதை சொல் ! .....நேரமில்லை என்று ...
அவளுக்கு எப்படி சொல்வது ....என் வாழ்வே முக்கியம்தான் என்று.
சாந்தினி

1 கருத்து:

  1. அருமையான கோர்வைகளாய் வார்த்தைகள்...
    வாழ்க்கையின் தவிப்புக்கள் எழுத்துகளினூடு புரிய வைத்திருக்கிறீர்கள்..
    நன்றாக இருக்கிறது... தொடர்நதும் எழுதுங்கள்....

    பதிலளிநீக்கு